ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குபொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகை குறித்து...

Tamil Nadu player Abhay Singh

தமிழக வீரர் அபய் சிங் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் அபய் சிங்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக வீரர், வீராங்கனைகளும் பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் அபய் சிங் வெள்ளி வென்றுள்ளார். இது குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் அபய் சிங், பல்வேறு உலகளவிலான போட்டிகளில் திறம்பட விளையாடி உலக அரங்கில் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் அபய் சிங் அவர்கள், இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமைகள் சேர்க்கும் விதமாக வெற்றிப் பயணத்தைத் தொடர எனது பாராட்டுகள்.

இவரது சாதனைகள், அபாரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

Summary

₹50 lakh cash incentive announced for the Tamil Nadu athlete abhay singh who won silver at asian games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.