பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பதக்கம் வென்ற விதர்சாவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்திய பிரியங்கா காந்தி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற விதர்சா வினோத்தின் நேரில் சென்று வாழ்த்திய பிரியங்கா காந்தி பற்றி....

Priyanka visits Asian Games silver medallist Vidarsa's home

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள்.

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற விதர்சா வினோத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

கேரள மாநிலம், மலப்புறத்திலிருந்து தனது வயநாடு தொகுதிக்குச் செல்லும் வழியில், விதர்சாவின் வீட்டிற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சனிக்கிழமை சென்றார். அப்போது அவரது பெற்றோரான கே.டி. வினோத் மற்றும் அனிதா ஆகியோர் வரவேற்றனர்.

விதர்சா வயநாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, எதிர்காலத்தில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்தினார்.

மேலும், இந்த இளம் விளையாட்டு வீராங்கனை ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்தப் பயணத்தின்போது, மாநில வேளாண் துறை அமைச்சர் டி. சித்திக் உடன் இருந்தார்.

விதர்சா, வயநாடு தொகுதியில் உள்ள திருவம்பாடியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் குழுப் போட்டியில், திலோத்தமா சென் மற்றும் ஆஷி சௌக்சியுடன் இணைந்து விதர்சா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress leader Priyanka Gandhi Vadra on Saturday visited the home of Asian Games silver medallist Vidarsa Vinod and congratulated her on the achievement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.