
தங்கம், வெள்ளி அதிரடி விலை குறைவு! எவ்வளவு?- செப். 28 நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
வாரத்தின் முதல்நாளான இன்று (செப். 28) தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 1880 per sovereign today (Sept. 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






