பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

குடிநீர், உப்பு, சர்க்கரை பாக்கெட்டுகளில் மைக்ரோ பிளாஸ்டிக்: உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

குடிநீர், உப்பு, சர்க்கரை பாக்கெட்டுகளில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை தொடர்பான உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு...

 Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - ANI

Published On :

சென்னை: குடிநீர் பாட்டில்களில், உப்பு, சர்க்கரை பாக்கெட்களில், மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கலாம் என்ற எச்சரிக்கை வாசகங்ககள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, மைக்ரோ பிளாஸ்டிக், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக் கூடியது. அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள், சர்க்கரை, உப்பு பாக்கெட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம். எனவே, சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டுமெனவும், இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிடும்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், உத்தரவை திரும்பப் பெறக் கோரி சுத்தமான சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களில், உணவுப்பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள் கலந்துள்ளது தொடர்பான ஆய்வுகளில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்தால் அது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வநந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உணவுப்பொருள்கள் பாதுகாப்பற்றவை என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிடவில்லை. எனவே அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு ஏற்ப, உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Summary

Microplastics in drinking water, salt, and sugar packets: High Court refuses to review its order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.