
முதல்வர் விஜய்யிடம் இருந்து ஓர் அழைப்பு... வெள்ளி வென்ற ஆன்சி சோஜன் நெகிழ்ச்சி!
ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற வீராங்கனை ஆன்சி சோஜனின் பேட்டி குறித்து...

முதல்வர் விஜய், ஆன்சி சோஜன் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா, ஏஎன்ஐ, பிடிஐ
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் முதல்வர் விஜய் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் பங்கேற்று, 6.53 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். வெறுமனே 2 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தைச் சேர்ந்த 25 வயதான ஆன்சி சோஜன் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். விஜய்யின் ரசிகையான இவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது:
முதல்வர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வரவேண்டுமென விரும்புகிறேன். அவரது உத்வேகம் தரும் பேச்சுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதைக்கு இது மட்டுமே சொல்ல விரும்புகிறேன். அவரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
முன்னதாக தில்லியில், இந்திய நேஷ்னல் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆன்சி சோஜன் வென்ற போது முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையை செய்து கவனம் பெற்றார்.
National record-holding long jumper Ancy Sojan recreates CM Vijayâs iconic gesture! â¤ï¸ð¥
— Maha NM - TVK â¤ï¸ððâï¸ (@Maha08981560) September 12, 2026
A beautiful moment of admiration, respect and inspiration, when sporting excellence meets a gesture of Annan that has captured the hearts of many today ððª #AncySojan #Vijay⦠pic.twitter.com/v9ugdZQjTd
Summary
A call from Thalapathy Vijay: Ancy Sojan's one wish after Asian Games silver
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







