அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

வெங்காயம் விலை உயர்வுக்கு வியாபாரிகள் காரணம் இல்லை

வெங்காய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் காரணம் இல்லை  என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:10 pm IST

வெங்காய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் காரணம் இல்லை  என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.

இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி:

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்களைத் திரட்டி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நவ. 19-ம் தேதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.

நகைக் கடை, செல்போன் கடை, மொத்த வியாபாரக் கடை உள்ளிட்டவற்றில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வெங்காய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் காரணம் அல்ல. இதற்கு விளைச்சல் குறைவாக உள்ளதே காரணம் என்றார் விக்கிரமராஜா.

பின்னர், நடைபெற்ற பேரமைப்பின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் கே. மோகன், மண்டலத் தலைவர் எல். செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநிலத் துணைத் தலைவராக கே. சுப்பிரமணியன், இணைச் செயலராக எஸ். சேகர், மாவட்டத் தலைவராக எஸ்.எஸ். பாண்டியன், செயலராக எம். பக்கிரிசாமி, பொருளாளராக ஆர். பாஸ்கரன், நகரச் செயலராக ஏ.வி.எம். ஆனந்த் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.