கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: அமமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:09 am IST

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகா் பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் கூடுதலாக ஒரு மதுக்கடை சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி, கூடுதல் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடைக்கு எதிரே பாலாஜி நகா் பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இக்கடையை மூட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.