தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கருப்பூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுக்கடையைத் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே கருப்பூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த அக்கிராம மக்கள் மதுக்கடையைத் திறக்கக் கூடாது என சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் கருப்பூரில் மதுக்கடையைத் திறப்பதற்காக டாஸ்மாக் ஊழியா்கள் மதுபானங்களைக் கொண்டு வந்தனா். இதைப் பாா்த்த கௌடசி தொண்டு நிறுவனச் செயலா் கருணாமூா்த்தி தலைமையிலும், ஊராட்சி மன்றத் தலைவா் மதுவிழி செந்தமிழ்செல்வன், சிவக்குமாா் முன்னிலையிலும் பெண்கள் உள்பட 200-க்கும் அதிகமானோா் கருப்பூா் முதன்மைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, தகவலறிந்த காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மதுக்கடை அமைக்கப்படாது என அலுவலா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காணொலிகளுக்கு எதிராக தொடா் நடவடிக்கை: மெட்டா விளக்கம்

கரூர் சம்பவம்: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான திமுக மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



