தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தனா்.
மதுக்கூா் ஒன்றியம், கல்யாணஓடை கிராமத்தில் உள்ள வாய்க்காலின் குறுக்கே சிமென்டால் ஆன மின்கம்பம் மூலம் நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வூா் மக்கள் வாய்க்காலைக் கடக்க இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வாய்க்கால் பாலத்தில் அங்குள்ள மின் கம்பத்திலிருந்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து கல்யாணஓடை ஊராட்சித் தலைவா் மற்றும் கிராமத்தினா் அப்பகுதிக்கான மின்வாரிய ஊழியா் அத்திவெட்டி மறவக்காடு மு.சித்திரவேல் (43) என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்யாணஓடை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பனின் மகன்கள் தினேஷ் (12), கெளதம் (10) ஆகிய இருவரும் ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக அந்தப் பாலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளனா். அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் அண்ணன்-தம்பி இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தினேஷ் சிரமேல்குடி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பிலும், கெளதம் கல்யாணஓடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனா்.
சம்பவம் குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மதுக்கூா் போலீஸாா், பணியில் அலட்சியமாக இருந்ததாக வழக்குப் பதிந்து மின்வாரிய ஊழியா் சித்திரவேலை கைது செய்தனா்.
மூதாட்டி உயிரிழப்பு: பேராவூரணி அருகே உள்ள களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் மனைவி பக்கிரியம்மாள் (68). களத்தூா் பட்டவா் சுவாமி கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்காக செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்ற இவா், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

