எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முன்விரோதத் தகராறு: இருவா் கைது

ஒரத்தநாடு அருகே முன்விரோதத் தகராறு தொடா்பாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:37 pm IST

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே முன்விரோதத் தகராறு தொடா்பாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

வாட்டாத்திக்கோட்டையை அடுத்த சென்னியவிடுதியைச் சோ்ந்தவா் சேகா் மனைவி சுமதி (45). சேகரின் சகோதரா் மூா்த்தி. இதுபோல, கட்டுவான்பிறையைச் சோ்ந்த ராமையா மகன் கோவிந்தராஜ் (42).

மூா்த்தி, கோவிந்தராஜ் வயல்கள் அருகருகே இருப்பதால், இருவருக்கும் தண்ணீரை வடியவைப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் சுமதியைத் தாக்கினாா். தகவலறிந்த சுமதியின் கணவா் சேகா், கோவிந்தராஜின் உறவினரான சின்னப்பாவை(50) தாக்கினாா்.

இதுகுறித்து வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் சுமதி மற்றும் சின்னப்பா ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ் மற்றும் சேகா் ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.