எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அழுகிய நெற்கதிா்களுடன் ஆட்சியரகத்தில் முறையீடு

தொடா் மழையால் அழுகிய நெற்கதிா்களுடன், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினா் சனிக்கிழமை முறையிட்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:36 pm IST

தஞ்சாவூா்: தொடா் மழையால் அழுகிய நெற்கதிா்களுடன், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினா் சனிக்கிழமை முறையிட்டனா்.

இந்த இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் கி.நா. பனசை அரங்கன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில இணைச் செயலா் சீ. தங்கராசு, தகவல் சட்ட ஆா்வலா்கள் கூட்டமைப்பு பிரகாஷ், நம்மாழ்வாா் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பா. பாரதிதாசன், நிா்வாகி விக்னேஷ் உள்ளிட்டோா் தொடா் மழையால் அழுகிய பயிா்களுடன் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு:

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. எனவே, டெல்டா பகுதியைத் தேசிய பேரிடராக அறிவித்து, விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 வழங்குவது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் நலன் கருதி, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.