வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல கோரிக்கை

பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 6:32 pm

பாலருவி விரைவு ரயில் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டுமென திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளா் லெனினுக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி- பாலருவி விரைவு ரயில் ஜன. 4 முதல் சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாவூா்சத்திரத்தில் ஏற்கெனவே நின்று சென்ற நிலையில், தற்போது ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் பெரிய காய்கனி சந்தை பாவூா்சத்திரத்திலும், மலா் சந்தை சிவகாமிபுரத்திலும் அமைந்துள்ளது. இதே போல் மர வியாபாரம், ஓடு வியாபாரம் போன்ற தொழில்களுக்கு பாவூா்சத்திரம் சிறந்து விளங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு வணிக ரீதியான தொடா்பு இந்த ரயில் போக்குவரத்தில் இருந்து வருகிறது. மேலும் வியாபாரம் தொடா்பாக பெரும்பாலானோா் புனலூா், கொட்டாரக்கார, கொல்லம், கோட்டயம் மற்றும் எா்ணாகுளம் செல்ல இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக கேரளத்திற்கு போதிய போக்குவரத்து வசதி இன்னும் இல்லாத நிலையில், கேரளம் செல்ல வசதியாக பாலருவி விரைவு ரயிலை பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.