தொடா் மழை காரணமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.
மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிரம்பியதால், நாகல்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் நாகல்குளம் வியாழக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









