நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பாவூா்சத்திரம் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

பாவூா்சத்திரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:09 am IST

பாவூா்சத்திரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னநாடானூரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் வருண் அகிலன் (21). பட்டதாரியான இவா், கீழப்பாவூரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டிலிருந்து பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் வந்தாராம். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சோ்ந்த மாசானகருப்பன் மகன் பிரபு (20) ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நோ் மோதிக்கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், வருண்அகிலன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.