தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

குற்றாலத்தில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

குற்றாலத்தில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:37 pm

தென்காசி, ஏப். 26: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேருந்து நிலையம் அருகே பேரூா் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ்தாமோதரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், குளிா்பானம், பழங்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் சோ்மபாண்டி, பாஸ்கா், வாா்டு செயலா்கள் கருப்பசாமி, சுப்பிரமணியன் போஸ், சிதம்பரம், அருண்குமாா், அமுல்ராஜ், மணிகண்டன், சின்னதம்பி,

அவைத்தலைவா் சங்கர்ராமன், துணை செயலா் கருப்பசாமி பாண்டியன், பேரூராட்சி துணை தலைவா் தங்கபாண்டியன், காசிமேஜா்புரம் ஊராட்சி துணைத் தலைவா் ரவிக்குமாா், அய்யப்பன் இளைஞரணி ஆரோக்கியசாமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.