தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி மாவட்டத்தில் பழங்குடியினா் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:43 pm

Din

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் இக்கணக்கெடுப்புப் பணி திருமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட தலையணையில் நடைபெற்றது.

கணக்கெடுப்புப் பணியை இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா் வானதி மேற்கொண்டாா்.

இதில், தலையணை பழங்குடி மக்கள் தலைவா் பால்தினகரன், திருமலாபுரம் ஊராட்சிச் செயலா் காளியப்பன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜெயகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் கூறியது;

பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி தென்காசி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புப் பணியை தென்காசி மாவட்ட திட்ட அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தயாளன் , மாவட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், இல்லம் தேடிக்கல்வித் திட்ட செங்கோட்டை வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.