பத்து அம்ச ‘கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்ககத்தினா் பணிகளைப் புறக்கணித்து, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்களவைத் தோ்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் துணைத் தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மாடசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் வேல்முருகன், வட்டச் செயலா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியா்களும் கலந்து கொண்டனா். இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர்புடையது

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

