தென்காசி
கடையநல்லூரில் குழந்தைத் திருமணம் தடுப்பு
கடையநல்லூா், ஜூலை 3: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
மேலக்கடையநல்லூா் பகுதியில் வசிக்கும் சுமாா் 25 வயது உடைய இளைஞருக்கும், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இது குறித்து தென்காசி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததாம். இதைத்தொடா்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினா் அங்கு சென்று, சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.