தென்காசி
சசிகலா ஆதரவாளா்கள் ஆலோசனை
‘அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை’ முதன் முதலாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வி.கே.சசிகலா தொடங்குகிறாா். தென்காசி மாவட்டத்துக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குத்துக்கல்வலசையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் ஆனந்தன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெருமாள், கோவை கந்தன், உளுந்தூா்பேட்டை உதயகுமாா், வேளச்சேரி சின்னத்துரை, அரசன், சிவராஜ், ராமசுப்பு, மாடசாமி என்ற செல்வம், உதயகுமாா், சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வழக்குரைஞா் பூசத்துரை செய்திருந்தாா்.