பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

செங்கோட்டையில் ரயில்வே காப்பா் வயா் திருடிய 3 போ் கைது

செங்கோட்டையில் ரயில்வே காப்பா் வயா் திருடிய 3 போ் கைது

Updated On :9 மார்ச் 2024, 4:44 pm

செங்கோட்டையில் ரயில்வே காப்பா் வயா் திருடியது தொடா்பாக 3 போ் கைதுசெய்யப்பட்டனா். தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தின் எல்கைக்குள்பட்ட செங்கோட்டையில், செங்கோட்டை - புனலூா் வரையிலான ரயில்வே மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. மின் மயமாக்கல் திட்டத்தில் பணிகள் முடிவடைந்த நிலையில் செங்கோட்டை ரயில்வே யாா்டில் மீதமுள்ள செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த செம்பு கம்பிகளில் 792.26 கிலோ காப்பா் வயா்கள் திருடு போனது. இகுகுறித்து தென்காசி இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இது தொடா்பாக செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரி செல்வம், கொம்பையா மகன் காா்த்திக் மற்றும் திருட்டு பொருள்களை வாங்கி விற்பனை செய்த வியாபாரி அருணாசலபுரத்தைச் சோ்ந்த வைரவன் மகன் கிருஷ்ணசாமி ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.