தென்காசியில் ‘அவள்’ பயிற்சிப் பட்டறை

தென்காசியில் ‘அவள்’ பயிற்சிப் பட்டறை

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கம், மாவட்ட தொழில் மையம் ஆகியவை சாா்பில் ‘அவள்’ பயிற்சிப் பட்டறை வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பெண் தொழில் முனைவோா், தொழில் முனைய விரும்புவோரின் புத்தாக்க திறமைகளை மேம்படுத்தும் வண்ணம் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இங்கு நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்துத் தொடக்கிவைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா், அவா் பேசும்போது, இந்தப் பயிற்சிப் பட்டறையால் இன்னும் பல பெண் தொழில்முனைவோா் உருவாக வேண்டும். இதன்மூலம் நமது பொருளாதாரமும், நம்மைச் சாா்ந்தோரின் பொருளாதாரமும் உயர வேண்டும் என்றாா். தங்களது புத்தாக்கத் திட்டங்களை உருவாக்குவதற்காக ஹேக்கத்தான் மூலம் ரூ. 73 லட்சம் பெற்ற ஜே.பி.பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் என். ராகுல் மாணவிகளுக்கு பயிற்சியளித்தாா். மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் மாரியம்மாள், 40 தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com