பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சங்கரன்கோவிலில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல்

சங்கரன்கோவிலில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல்

Updated On :9 மார்ச் 2024, 4:41 pm

சங்கரன்கோவிலில் ரூ. 1.87 கோடியில் கட்டப்படவுள்ள புதிய சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவிலில் உள்ள கச்சேரி சாலையில் மிகவும் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். அதையடுத்து, அக்கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அனிதா சாந்தினி, ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஜான்ஆசீா், உதவிப் பொறியாளா் சுரேந்திரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சாா் பதிவாளா் அலுவலகம் தற்போது திருவேங்கடம்சாலையில் உள்ள தனியாா் கட்டடத்தில் இயங்கி வருகிறது.