தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடிபழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மாா்ச் 24ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதில், மாா்ச் 27ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையொட்டி, நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினா். அதிமுக மகளிரணி துணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச்செயலா் கண்ணன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் எஸ். சிவஆனந்த் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச்செயலா் சண்முகப்பிரியா, மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


