மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

கம்பிளி ஸ்ரீஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

கம்பிளி ஸ்ரீஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

News image
Updated On :5 மே 2024, 6:36 pm

Din

தென்காசி, மே 5: தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளியில், தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஈஸ்வரி அம்மன், சீவலப்பேரி சுடலைமாடன் திருக்கோயில் கொடை விழா நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 30ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலமும், இரவு 10 மணிக்கு வில்லிசை குழு கச்சேரியும், இரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றது.

மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி கரைத்தல், இரவு 10 மணிக்கு கரகாட்டம் நடைபெற்றது. 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் அழைத்து வருதல், இரவு 10 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 3ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 12 மணிக்கு சாமக் கொடையும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கம்பிளி தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் மற்றும் இளைஞரணியினா் செய்திருந்தனா்.