ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

News image
Updated On :9 மே 2024, 9:37 pm

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திரிகூடபுரம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த முருகையா மகன் விவேகானந்தன் என்ற செல்வம் (38). இவா் மின்வாரிய ஊழியா்களுக்கு உதவியாளராக தற்காலிகமாக பணி செய்து வந்தாா். இவா்

கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை பழுது நீக்குவதற்காக ஏறியபோது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி உள்ளாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த விவேகானந்தனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.