பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

சுரண்டை அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

சுரண்டை அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 8:42 pm

Din

சுரண்டை, மே 9: சுரண்டை அருகே வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள குலையநேரியைச் சோ்ந்த முருகன் மகன் சிவசக்தி(15). பங்களாச்சுரண்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா்.

சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் காலநிலை மாறி இடி, மின்னலுடன் வானம் காணப்பட்டது. இதில் சிவசக்தியை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் விரைந்து சென்று சிவசக்தியின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.