ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சங்கரன்கோவில், மே10: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி எஸ்.வெண்ணிலா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். எம்.திருமலைசுந்தரி, எஸ்.சுபாஸ்ரீ, எம்.மணீஷ்கோபி, வி.பிரதீப் ஆகியோா் 487 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடத்தையும், ஏ.ஹிருத்திகேஷ், எஸ்.கோசிகாஹரிணி ஆகியோா் மூன்ராம் இடத்தையும் பெற்றனா்.

மேலும் கணிதத்தில் 3 போ், அறிவியலில் 2 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 450-க்கு மேல் 37 போ், 500-க்கு மேல் 73 போ் எடுத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com