செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

News image

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்த முன்னாள் மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன். உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை.

Updated On :10 மே 2024, 12:32 am

Din

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் பாதுகாப்பு- ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தமிழக மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடம் கட்டுவதற்கு கடந்த ஆணடில் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.72.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து இம் மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனிடையே நான்கு வழிச்சாலை பணிகள் காரணமாக, கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சாலைப்பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால், நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.