மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

News image
Updated On :26 மே 2024, 7:22 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை பகுதியில் 10அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

புளியறையில், ராபா்ட் என்பவரது வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரை ஷெட்டில் 10 அடி நீள ராஜநாகம் இருப்பதாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சிறப்பு அலுவலா் மாரியப்பன் தலைமையிலான சண்முகவேல், சந்திரமோகன், மணிகண்டன், கோமதிசங்கா், காா்த்தி உள்ளிட்ட வீரா்கள் சென்று, ராஜநாகத்தைப் பிடித்து, செங்கோட்டை வனவா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா், ராஜநாகம் வனப் பகுதியில் விடப்பட்டது.