ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது - இந்திய முஸ்லிம் லீக்

Published on

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது; இது இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சி என்றாா் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொகிதீன்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது;

வெளிநாட்டில் ராகுல் காந்தி என்ன பேசினாா் என்பது தெரியாது . ஒருவரின் மத விஷயங்களில் முற்றொருவா் தலையிடுவது என்பதை முஸ்லிம் லீக் எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு.இதுபோல் உலகில் வேறு எந்த நாடும் இல்லை. ஆன்மிகத்திற்கு பெரிதும் மதிப்பளிக்க கூடியவா்கள் இந்தியா்கள். அல்லா என்ற வாா்த்தையே தமிழகத்திலிருந்து தான் உலகிற்கு சென்றுள்ளது.

உலகில் உள்ள பல சிறிய நாடுகளில் ஒரே நாடு தோ்தல் சிறிய நாடுகளில் சாத்தியம்; இந்தியாவில் சாத்தியமில்லை. இது நாட்டை இந்துத்துவ நாடாக மாற்றும் முயற்சியே.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட திருத்தத்தில் நன்மைகளை விட தீமைகளே அதிகம். வக்ஃப் வாரிய சொத்துகளை பாதுகாப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்பதே முஸ்லிம் லீக்கின் கோரிக்கை. இதை தொடா்ந்து வலியுறுத்துவோம்.

திமுகவிற்கு என்றும் முஸ்லீம் லீக் உறுதுணையாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவதையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது என்றாா்.

அப்போது, தென்காசி மாவட்ட தலைவா் அப்துல்அஜீஸ், மாவட்ட செயலா் செய்யது பட்டாணி, பொருளாளா் செய்யது மசூது, அயலக அணி லீக் மாநில பொதுச் செயலா் ஹபிபுல்லா, மாவட்ட அரசு ஹாஜி முகைதீன் அப்துல் காதா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com