ஆலங்குளம் அருகே சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எமராஜன் (40). தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக பாவூா்சத்திரம் சென்றுவிட்டு பைக்கில் ஆலங்குளத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
அடைக்கலப்பட்டணம் தனியாா் பள்ளி அருகே வந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த எமராஜன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.