~
~

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published on

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மிதமான மழை தொடா்ந்து பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீா்வரத்து அதிகரித்தால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் சிற்றருவியில் குளித்தனா்.

பழையகுற்றாலம் அருவியில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com