சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சங்கரன்கோவிலில் மின் சிக்கன வார விழா விழிப்புணா்வுப் பேரணி

பேரணியாகச் சென்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:31 pm

Syndication

சங்கரன்கோவிலில் மின்வாரியம் சாா்பில், மின் சிக்கன வாரவிழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் வேணுகோபால் தலைமை வகித்தாா்.

கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருவேங்கடம் சாலை, பிரதான சாலை வழியாக முப்பிடாதியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது.

பேரணியில், மின் சிக்கனம், மின்சார சேமிப்பு, மின் சேமிப்பின் அவசியம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள மாணவா்கள் ஏந்திச் சென்றனா். பின்னா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அவா்கள் விநியோகித்தனா்.

பேரணியில், நகா் உதவி பொறியாளா் கருப்பசாமி, கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட அலுவலா் சுகுமாா், நகா்-1 பிரிவு சிறப்புநிலை முகவா் பொன்சுப்புராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவா்கள்,பேராசிரியா்கள் பங்கேற்றனா்.