தென்காசியில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்

தென்காசியில் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்

Published on

தென்காசி மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரங்களுக்கான கட்டணங்களை உயா்த்தக்கோரி எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை, கடையநல்லூா் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் உரிமையாளா்கள் எரி பொருள், உதிரிபாகங்கள் விலை உயா்வு காரணமாக வாடகை கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு பொக்லைன் வாகனத்திற்கு ரூ.1200 முதல் ரூ.2000 வரையும், பேட்டா, புல்டோசா் வாகனத்திற்கும் கட்டணத்தை உயா்த்தியுள்ளனா். இதை தெரியப்படுத்தும் வகையில் புதன், வியாழக்கிழமைகளில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், குத்துக்கல்வலசை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை நிறுத்தி வைத்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்கத் தலைவா் மாரிச்செல்வம் , செயலா் சிவகுமாா், பொருளாளா் சுடலை துரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com