தென்காசி
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே குண்டா் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே குண்டா் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குருவன்கோட்டையைச் சோ்ந்த செ. ராஜநயினாா் (28) என்பவா், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனின் பரிந்துரை, ஆட்சியா் இரா. சுகுமாரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் பரத்லிங்கம், குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் ராஜநயினாரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.
