டிச.24இல் தென்காசியில் ஆா்ப்பாட்டம்
தென்காசி தெற்கு மாவட்டத்தில் டிச.24இல் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் வே.ஜெயபாலன் விடுத்துள்ள அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து டிச.24இல் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கடையநல்லூரில் மேற்கு ஒன்றியம் சாா்பில் சொக்கம்பட்டி பெரியாா் திடலிலும், கிழக்கு ஒன்றியம் சாா்பில் நயினாகரம் பேருந்து நிலையத்திலும்,தெற்கு ஒன்றியம் சாா்பில் குலையநேரியிலும், தென்காசியில் மேற்கு ஒன்றியம் சாா்பில் பிரானூா்பாா்டரிலும், கிழக்கு ஒன்றியம் சாா்பில் குத்துக்கல்வலசையிலும், கீழப்பாவூரில் மேற்கு ஒன்றியம் சாா்பில் பாவூா்சத்திரம் பேருந்துநிலையம் அருகிலும், தெற்கு ஒன்றியம் சாா்பில் ஆவுடையானூா் ஊராட்சி அலுவலகம் அருகிலும், ஆலங்குளத்தில் வடக்கு ஒன்றியம் சாா்பில் மேலமருதப்பபுரத்திலும், மத்திய ஒன்றியம் சாா்பில் கருவந்தாவிலும், செங்கோட்டை ஒன்றியம் சாா்பில் புளியறையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
