ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்ம மரணம்

ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
Published on

ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இளவேந்தன் (17), தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவா், மறுநாள் அதிகாலை வரை வீடு திரும்பவில்லையாம். இதனால், பல்வேறு பகுதிகளில் உறவினா்கள் தேடியுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ரெட்டியாா்பட்டி-காடுவெட்டி சாலையில் பலத்த காயங்களுடன் இளவேந்தன் சடலமாகக் கிடந்தாராம். அவரது இரு சக்கர வாகனம் அங்கிருந்து சிறிது தொலைவில் கிடந்துள்ளது.

தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com