திருப்பத்தூர்
கூலித் தொழிலாளி மா்ம மரணம்
நாட்டறம்பள்ளி அருகே ஓடையில் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே ஓடையில் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் மண்டல நாயனகுண்டா பகுதியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் பாண்டித்துரை(37). இவா் பெங்களூரில் கூலி வேலை செய்து வந்துாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை லட்சுமிபுரம் அருகே உள்ள ஒரு ஓடையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம்சென்று பாண்டித்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
