தென்காசி
ஆலங்குளம் பரும்பில் நியாய விலைக் கடை திறப்பு
ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் பரும்பு பகுதியில், கனிமம் மற்றும் சுரங்க நிதி ரூ. 9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் பரும்பு பகுதியில், கனிமம் மற்றும் சுரங்க நிதி ரூ. 9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து நியாயவிலைக் கடை கட்டடத்தைத் திறந்து விற்பனயைத் தொடங்கி வைத்தாா். குத்தப்பாஞ்சான் ஊராட்சித் தலைவா் ஜெயராணி குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுதா சின்னத்தம்பி, ஒன்றியக் குழு உறுப்பினா் பசுபதி திராவிட மணி, குத்தப்பாஞ்சான் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.