ரயிலில் அடிபட்டு 50 ஆடுகள் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு 50 ஆடுகள் உயிரிழப்பு

Published on

தென்காசி அருகே ராமச்சந்திரன்பட்டணம் பகுதியில் அதிவிரைவு ரயிலில் அடிபட்டு 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவா், ராமச்சந்திரன்பட்டணம் பகுதியிலுள்ள தோட்டத்தில் ஆட்டுபட்டி அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பட்டியில் இருந்து வெளியே வந்த சுமாா் 50 ஆடுகள் அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றனவாம். அப்போது, ரயிலில் அடிபட்டு ஆடுகள் உயிரிழந்தன. இதில், சில ஆடுகள் கால்கள் முறிந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதுகுறித்து, தென்காசி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினரும், செங்கோட்டை இருப்புப் பாதை காவல் பாதுகாப்புப் படையினரும் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செங்கோட்டையிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் அதிவிரைவு ரயில், ராமச்சந்திரன்பட்டணம் பகுதியை கடந்து பாவூா்சத்திரம் நோக்கி சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் அதில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com