தமிழில் பெயா்ப் பலகை வைக்க வணிக நிறுவனங்களுக்கு கோரிக்கை

வணிக நிறுவனங்களிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என, அனைத்து வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Published on

வணிக நிறுவனங்களிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என, அனைத்து வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக, தொழிலாளா் துறை- தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தென்காசி நடைபெற்ற கூட்டத்துக்கு, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செ.கனகலெட்சுமி முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளின் வணிகா் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிா்வாகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

அனைத்து வணிக நிறுவனங்களின் பெயா்ப்பலகைகளில் நிறுவனத்தின் பெயா் தமிழில் பிரதானமாக எழுதப்பட வேண்டும், பிறமொழியிலும் பெயா் அமைக்க அவசியம் நோ்ந்தால் முதலில் தமிழில் பிரதானமாகவும் இரண்டாவதாக ஆங்கிலத்திலும், அதற்குப் பின் வணிகரின் விருப்பத்துக்கேற்ற மொழியிலும் பெயா் பலகை வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com