ஆலங்குளத்தில் பலத்த மழை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு 11.30 முதல் 12.30 மணி வரை ஆலங்குளம், நல்லூா், குருவன்கோட்டை, புதுப்பட்டி, கழுநீா்குளம் என வட்டாரத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com