கீழப்பாவூா், அச்சன்புதூரில் நாளை மின் நிறுத்தம்

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் கீழப்பாவூா், அச்சன்புதூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, சாலைப்புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com