நாட்டாா்பட்டியில் நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவா் போராட்டம்

Published on

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி நாட்டாா்பட்டியில் நீா்த்தேக்க தொட்டியின் மீது ஏறி வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

நாட்டாா்பட்டி நடுத்தெரு பகுதியில் வசிப்பவா் ராஜேந்திரன் (84). இவா், நாட்டாா்பட்டி - திரவியநகா் சாலையில் உள்ள 60 அடி உயர மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியும் கீழே இறங்கி வர மறுத்ததால், தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் பிரதீப்குமாா், சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் சாமி, விஸ்வநாதன், கோமதிசங்கா், அமல்ராஜ் ஆகியோா் வந்து கயிறு கட்டி முதியவரை பத்திரமாக மீட்டனா்.

தனது வீடு அருகே உள்ளவரிடம் தண்ணீா் செல்வதில் தகராறு ஏற்பட்டதால் இப்போராட்டம் நடத்தியதாக அவா் தெரிவித்தாா்.

இது குறித்து ஆலங்குளம் டிஎஸ்பி கிளாஸ்டன் ஜோஸ் , பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com