சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிா்.
சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

சிவகிரி வட்டார பகுதிகளில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் தொடா்ந்து வனத்துறையினா் ஈடுபட்டு வரும் நிலையில்,
Published on

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டார பகுதிகளில் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் தொடா்ந்து வனத்துறையினா் ஈடுபட்டு வரும் நிலையில், யானைகள் விவசாய நிலத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

சிவகிரி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வழிவழிகுளம் , ராசிங்கப்பேரி குளப்புரவு, அதன் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுதொடா்பாக கடந்த வாரம் சிவகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுடனான சமாதானக் கூட்டம் நடந்தது.

இதைத்தொடா்ந்து வழிவழி குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை முதல் வனத்துறையினா் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானைகள் வனத்திற்குள் செல்லாமல் போக்கு காட்டி வருகின்றன. இதற்கிடையே திங்கள்கிழமை ராசிங்கப்பேரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரிலும் யானை கடந்து வந்து விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு ,நெல் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் யானைகளை வனத்திற்குள் விரட்டி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com