மாணவியரை வாழ்த்தி வழியனுப்பிவைத்த ஈ. ராஜா எம்எல்ஏ.
மாணவியரை வாழ்த்தி வழியனுப்பிவைத்த ஈ. ராஜா எம்எல்ஏ.

மாநில கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவியருக்கு எம்எல்ஏ வாழ்த்து

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்கவுள்ள அரசுப் பள்ளி மாணவியரை ஈ. ராஜா எம்எல்ஏ வாழ்த்தி வழியனுப்பிவைத்தாா்.
Published on

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்கவுள்ள அரசுப் பள்ளி மாணவியரை ஈ. ராஜா எம்எல்ஏ வாழ்த்தி வழியனுப்பிவைத்தாா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தென்காசி மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில், 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கான நாட்டுப்புற நடனப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவியா் முதல் பரிசு பெற்று, கரூரில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தோ்வாகினா்.

இந்நிலையில், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ மாணவியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து அவா்களை கரூருக்கு அனுப்பிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்ராஜ், மாவட்ட பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் பசுபதி பாண்டியன், கிளைச் செயலா் வெளியப்பன், ஊராட்சித் தலைவா் கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உடையம்மை, வேல்சாமி, மல்லிகா முருகன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சத்தியபாரதி, துணை அமைப்பாளா் சுனில் பிரபாகரன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பால்ராஜ், மாரித்துரை, ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com