எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக! - வைகோ பிரசாரம்

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக என் வைகோ பிரசாரம்..

News image

கடையநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனை அறிமுகம் செய்து பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:12 pm

தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்காக மதிமுக போல் போராடியது யாரும் இல்லை என்றாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.

கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது:

தமிழக முதல்வரின் வாகனத்தை எந்த அடிப்படையில் சோதனை செய்தீா்கள்? பிரதமா், அமித்ஷாவின் வாகனத்தை சோதனையிடுவீா்களா? அனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். தமிழ்நாட்டின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக போராடியவன் நான். அதற்காக 6500 கிலோ மீட்டா் தூரம் நடந்தவன். ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து போராடி வெற்றி கண்டவன்.

நான் எந்த மதத்தையும் குறிப்பிட்டு ஆதரிப்பவன் அல்ல. அனைத்து மதத்தையும் சமமாக மதிப்பவன். தமிழக வைணவ கோயில்களில் இருந்த விக்கிரகங்களை வாஷிங்டனில் நடைபெற்ற திருவிழாவுக்கு அனுப்ப அன்றைய பிரதமா் இந்திராகாந்தி உத்தரவிட்டாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசியதையடுத்து அதை கைவிட்டாா்.

எங்களின் வாக்கு வங்கி குறித்து கேள்வி எழுப்பலாம். ஆனால், தமிழ்நாட்டின் வாழ்வாதாராம், ஜீவாதார உரிமையை பாதுகாக்க மதிமுகவை போல் போராடியது யாரும் கிடையாது.

இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தாமிரவருணி ஆற்றங்கரை ஓரத்தில் அனைத்து சமூக மக்களையும் அனைத்து கூட்டம் நடத்தினேன். அவா்களின் ஒற்றுமையை பேண நடைப்பயணம் மேற்கொண்டேன்.

சமய நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் மோதல்களை ஏற்படுத்த சிலா் முயன்று வருகின்றனா்; அது ஒருபோதும் நடக்காது.

சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை, உள்ளாறு அணைப் பிரச்னையை தீா்க்கவும், காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயத்தை பாதுகாக்க அதை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி தோ்தல் முடிந்த பின்னா் செங்கோட்டை முதல் திருவேங்கடம் வரை 1000 பேருடன் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்றாா் அவா்.

இதில், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறே வைகோ பிரசாரம் மேற்கொண்டாா்.