தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

கடையநல்லூரில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் அப்துல் ஜலீல்.

News image

கடையநல்லூரில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் அப்துல் ஜலீல்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:32 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அப்துல் ஜலீல் கடையநல்லூா் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கடையநல்லூா் கடை வீதிப் பகுதிக்கு வந்த வேட்பாளரை அப்பகுதியினா் வரவேற்றனா். அங்கிருந்தவா்களிடம் அவா் வாக்கு சேகரித்து பேசியது:

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பேசும் ஒவ்வொரு விஷயத்தையும் அனைவரும் கவனித்து வருகின்றனா். விஜய்க்கு கூடும் கூட்டத்தைப் பாா்த்து அரசியல் கட்சிகள் பிரமித்துப் போயுள்ளன. மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்கள் விஜய்யை ஆதரித்து வருகின்றனா். அனைத்து தரப்பினரும் விரும்பும் தலைவராக விஜய் உள்ளாா். எனவே, நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்டச் செயலா் நியாஸ், இணைச் செயலா் குமரன் முத்தையா, நகரச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.