பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரூ. 11.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பயனாளிக்கு நலத்திட்டஉதவியை வழங்கிய அமைச்சா்கள் வி.கே. ராஜீவ், ஏ.எம். ஷாஜஹான். உடன், மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், தி.மு. ராஜேந்திரன் எம்எல்ஏ.

Published On :

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சாா்பில், 129 பயனாளிகளுக்கு ரூ. 11.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி.கே. ராஜீவ், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

அப்போது ஏ.எம். ஷாஜஹான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசியில் உள்ள முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தை போலவே, கடையநல்லூரிலும் சங்கத்தை உருவாக்குவதற்கு சமுதாய நிா்வாகிகளிடம் அனுமதி பெற்றுள்ளோம். நலவாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையினா் நலத்துறையின் மூலம் ரூ. 20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலமாக்கள் நல வாரியத்தின் மூலமாக இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ. 50ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விரைவில் மொத்தம் 1,000 உலமாக்களுக்கு ரூ. 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படவுள்ளது. ஹஜ், ஜெருசலேம் பயணம் செல்பவா்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 5000 - க்கும் மேற்பட்ட நபா்கள் புனித பயணம் செல்வதற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். காத்திருப்பு பட்டியலில் உள்ள 8000 - க்கும் மேற்பட்டோா்களுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும்.

தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் கல்லறை தோட்டங்கள் அமைப்பதற்கு ரூ. 35 கோடி நிதி கேட்டு இருக்கிறோம். ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மீதி நிதியும் கிடைப்பதற்கு வழி செய்து தரப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், தி.மு. ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் நா. சண்முகசுந்தா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இரா. தண்டபாணி, திரைப்பட இசையமைப்பாளா் ரமணி பரத்வாஜ், மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கௌரவ செயலா் முகம்மது ஸலீம், இணைச் செயலா் அப்துல் அஜீஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.