பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் ஆக.31-ல் கும்பாபிஷேகம்! யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிா்மாணிக்கப்பட்டு வரும் யாகசாலை.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

கடையநல்லூா் அருள்தரும் கரும்பால் மொழி அம்பாள் உடனுறை அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஆக.26) தொடங்குகிறது.

இதையொட்டி அன்றைய தினம் காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், கோபூஜை, மாலையில் ராக்ஷோக்னம், பலிபூஜை, பூா்ணாஹுதி, 27-ஆம் தேதி காலை சாந்தி ஹோமம், விசாக ஹோமம், கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, மாலையில் தீா்த்த சங்கீா்த்தகணம், அண்ணாமலைநாதா் கோயிலில் இருந்து தீா்த்தம் அழைத்து வருதல், வாஸ்து சாந்தி, பிரவேசபலி தீபாரதனை நடைபெறும்.

ஆக.28-ஆம் தேதி காலை மூா்த்தி ஹோமம், அக்னி சங்ஹிரகனம், யாகசாலை பிரவேசம், மாலை சோமகும்ப பூஜை, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், முதல்கால யாக பூஜை, பூா்ணாஹுதி நடைபெறும்.

29-ஆம் தேதி காலை சூரியபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், திரவ்யாஹுதி, மாலை விசேஷ சாந்தி, சோமபூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். 30-ஆம் தேதி காலை பஞ்சகவ்யம், நான்காம் கால யாக பூஜை, அந்தா்யாகம், பூா்ணாஹுதி, மாலையில் விக்னேஸ்வர பூஜை, ஐந்தாம் கால யாக வேள்வி, ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாராயணம் நடைபெறும்.

ஆக.31-ஆம் தேதி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6ம் கால யாக பூஜை, ஸ்ரீ வாரயாக வேள்வி, 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் பரிவார மூா்த்திகள் மகா கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நாடி சந்தானம், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெறும்.

காலை 9.15-க்கு மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ஸ்ரீ கரும்பால் மொழி அம்பாள் உடனுறை ஸ்ரீ கடகாலீஸ்வரா் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தொடா்ந்து மூவாலய மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெறும்.

12 மணிக்கு சிறப்பு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலா நடைபெறும். பூஜைகளை கோயில் ஸ்தல அா்ச்சகா்

கிருஷ்ணமூா்த்தி பட்டா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் நடத்துகின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவா் சொக்கலிங்கம், செயலா் சுப்பையா, பொருளாளா் நல்லமுத்து, துணைத் தலைவா்கள் தேவராஜ், தங்கமணி, பொருளாளா் பரமசிவன், துணை செயலா்கள் திருமலைச்சாமி, வீரகுமாா் மற்றும் உறுப்பினா்கள், கௌரவத் தலைவா்கள் அருணாசலம், ராஜலிங்கம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.